
திருமணத்தைப் பயன்படுத்தி இந்து சமூகப் பெண்களை, மற்ற சமூகத்தினர் கட்டாய மத மாற்றம் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை பா.ஜ.க தொடர்ந்து முன்வைத்து வருகிறது. அவ்வாறு கட்டாயம் மத மாற்றங்கள் செய்பவர்களை ‘லவ் ஜிகாத்’ என்று பா.ஜ.க பொதுவாக அழைத்து வருகிறது. லவ் ஜிகாத்தை தடுக்கும் விதமாக உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில், மதமாற்றத் தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்திற்கு எதிராக மதமாற்றம் செய்ய வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் இப்படி ஒரு சட்டம் இருக்கும் பட்சத்தில், இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை 30 வயது பெண் திருமணம் செய்திருக்கிறார். உத்தரப் பிரதேச மாநிலம், அம்ரோகா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சப்னம். இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த இவருக்கு பெற்றோர் யாரும் இல்லை. இவருக்கு, மீரட்டில் வசிக்கும் ஒரு நபரோடு திருமணம் நடைபெற்றுள்ளது.
இவர்களது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்ததால், சைதான்வலி கிராமத்தைச் சேர்ந்த தெளஃபிக் என்பவரை சப்னம் திருமணம் செய்து கொண்டார். 2011இல் நடந்த விபத்து ஒன்றில் சிக்கிய தெளஃபிக்கும் காயம் ஏற்பட்டதால் அவர் மாற்றுத்திறனாளியானார். இதற்கிடையில், சப்னத்துக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர்.
இந்த சூழ்நிலையில், 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருடன் சப்னத்துக்கு உறவு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தனர். அதன்படி, இரண்டாவது கணவரான தெளஃப்பிக்கிடம் இருந்து கடந்த வாரம் சப்னம் விவகாரத்து பெற்றார். அதன் பிறகு சப்னம், தனது பெயரை ஷிவானி என்று மாற்றிக்கொண்டு தனது மூன்று குழந்தைகளுடன் தானும் இந்து மதத்திற்கு மாறினார். அதனை தொடர்ந்து, ஒரு கோயிலில் அந்த 12ஆம் வகுப்பு மாணவரை ஷிவானி இந்து மத முறைப்படி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்காக மதமாற்றம் செய்ய தடை விதிக்கப்பட்ட நிலையில், எந்தவித சட்டப்பூர்வ புகாரும் இல்லாததால் போலீஸ் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.