
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெலிக்ஸ். 37 வயதான இவர், உள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் தர்பூசணி பயிர் செய்துள்ளார். இந்த நிலையில் அதே கிராமத்தில் 11 வயது சிறுமி ஒருவர் 6 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் பள்ளி செல்லும் போது தர்பூசணி சாப்பிட ஆசைப்பட்டு பெலிக்ஸ் நிலத்தில் பயிர் செய்யப்பட்ட தர்பூசணியை சாப்பிட பறித்ததாக கூறப்படுகிறது.
இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த பெலிக்ஸ் சிறுமியைத் தூக்கிச் சென்று அடித்துத் தாக்கி பாலியல் ரீதியாக அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாய் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி ஒருவர் தர்பூசணியை பறித்ததற்காக அதன் உரிமையாளர் தாக்கி அத்துமீறிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.