Published on 29/05/2019 | Edited on 29/05/2019
ஈரோடு சத்தியமங்கலம் அருகே பசுவனாபுரம் பகுதியில் மின்வேலியில் சிக்கி பெண் யானை உயிரிழந்துள்ளது. ராஜேந்திரன் என்பவரது விவசாய நிலத்தில் வைத்திருந்த மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்தது.

இதேபோல் நேற்று நெல்லை மாவட்டம் கடையநல்லூர் வனச்சரகம் புளியங்குடி அருகே உள்ள முந்தல் என்ற வனப்பகுதியில் சுப்பையா என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று அதிகாலை ஒரு வயது ஆண் யானை இறந்து கிடந்தது. அது அங்குள்ள மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது குறிப்படத்தக்கது.