அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் சின்னப்பா - பச்சையம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு பாலமுருகன் என்ற மகனும், பானுப்பிரியா என்ற மகளும் உள்ளனர். இதில் பாலமுருகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். பானுப்பிரியாவுக்கு திருமணாகி கணவர் வீட்டுடன் வாழ்ந்து வந்து வருகிறார்.
இந்த நிலையில் சின்னப்பாவும், பச்சையம்மாள் இருவரும் தனியாக வீட்டில் வாழ்ந்து வந்தனர். சின்னாப்பாவிற்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால், அடிக்கடி குடித்துவிட்டு பச்சையம்மாளிடம் தகராறு செய்து சண்டையிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் பானுப்பிரியா தனது பெற்றோர் வீட்டிற்கு சில தினங்களுக்கு முன்பு வந்துள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சின்னப்பா, வீட்டில் இருந்த பச்சையம்மாள், பானுப்பிரியா இருவரிடமும் தகராறு செய்துள்ளார். இதனால் ஒருக் கட்டட்தில் ஆத்திரமடைந்த இருவரும் தங்களது வீட்டில் இருந்து வெளியேறி, அக்கம்பக்கத்தில் உள்ளவர் வீட்டில் இருந்தனர்.
இந்த நிலையில் அடுத்தநாள் காலையில் சின்னப்பா வீட்டில் கை கால்கள் மற்றும் ஆண் உறுப்பு அறுக்கப்பட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அன்று இரவு சின்னப்பா தகராறு செய்ததால் பச்சையம்மாள மற்றும் பானுப்பிரியா இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி பக்கத்து வீட்டில் இரவு தங்கியுள்ளனர். பின்பு அதிகாலை 3 மணிக்கு பச்சையம்மாள் மட்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் போதையில் தூங்கொண்டிருந்த சின்னப்பாவை அருகே கிடந்த கம்பியால் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.
இதையடுத்து அவர் பிழைத்துகொண்டால் தன்னை கொன்று விடுவார் என்று நினைத்த பச்சையம்மாள் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சின்னப்பாவின் கை கால்களை அறுத்துள்ளார். இருப்பினும் ஆத்திரம் குறையாதால் அவரின் ஆணுறுப்பை அறுத்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சின்னப்பா உயிரிழந்துள்ளார் என்று வாக்குமூலமாக பச்சையம்மாள் தெரிவித்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இதனைத் தொடந்து பச்சையம்மாளை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.