Published on 06/12/2023 | Edited on 06/12/2023

சிதம்பரம் கீழத்தெருமாரியம்மன் கோயிலில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைய தேமுதிக கடலூர் தெற்கு மாவட்டம் சார்பில் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் மற்றும் தொண்டர்கள் முடிகாணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் உமாநாத் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட அவைத்தலைவர் பாலு, மாவட்டத்துணைச்செயலாளர் பானுசந்தர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்துகொண்டனர். தொண்டர்கள் சம்பத், ராஜேந்திரன் உள்ளிட்ட 3 பேர் முடிகாணிக்கை செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து கருவறையில் பூஜை நடைபெறும்போது தொண்டர்கள் கையில் விஜயகாந்த் படத்தை வைத்துக்கொண்டு மனமுறுகி வேண்டினார்கள்.