Skip to main content

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி எப்பொழுது?-அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்!

Published on 06/09/2021 | Edited on 06/09/2021

 

When is the laptop for 12th class students? -Minister Mahesh answers!

 

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஒருமாத காலமாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதில் பல்வேறு புதிய அறிவிப்புகளைத் தமிழ்நாடு அரசு அறிவித்துவருகிறது. இந்நிலையில், இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், முதலில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் லேப்டாப் கொடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. 2018 மற்றும் 2019 இல் 12 மற்றும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கும் கொடுக்கலாம் எனத் திட்டமிடப்பட்டது. அதிலிருந்து ஆரம்பித்தால்தான் சரியான நேரத்திற்கு அந்த மடிக்கணினி அவர்களை போய் சேரும் என்று அரசாணையில் இருக்கின்றது.

 

இதுவரை  45 லட்சத்து 71 ஆயிரத்து 675 மாணவர்கள் பயன் பெற்றிருக்கிறார்கள். கிட்டதட்ட 6,349.63 கோடி ரூபாய் இதற்காகச் செலவிடப்பட்டிருக்கிறது. கரோனா காரணமாகக் கடந்த இரண்டு வருடமாக ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 789 மடிக்கணினிகள் வழங்குவதில் பென்டிங் இருக்கிறது. அதேபோல் தோராயமாக 5 லட்சம் மடிக்கணினிகள் வழங்க வேண்டிய சூழல் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் 11 லட்சத்து 72 ஆயிரத்து 817 மடிக்கணினிகள் வழங்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.  உடனடியாக முன் வெளியீட்டுத்திட்டத்தில், கல்வி ஆண்டு ஆரம்பிக்கப் போகிறது என்றால் ஆறு மாதத்திற்கு முன்பாகவே அதற்கான திட்டங்களை எல்லாம் வகுத்து உரிய நேரத்தில் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி போய்ச் சேர நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்