Skip to main content

இந்து சமய அறநிலையத்துறை எதற்கு உள்ளது? ஐகோர்ட் அதிரடி கேள்வி

Published on 16/02/2018 | Edited on 16/02/2018
tamilnadu

 

சிலைகளை அறையில் வைக்க இந்து சமய அறநிலையத்துறை எதற்கு என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

 

சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை  விசாரிக்க, ஜ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில்  சிலைக் கடத்தல் சிறப்பு பிரிவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தவிட்டிருந்தது.

 

சிலைகள் பாதுகாப்பு தொடர்பாக 21 வழிமுறைகளையும் உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் வழங்கி இருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு  இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்து சமய அறநிலைய துறை சார்பில்  21  வழிமுறைகளில், 5 கோரிக்கைகளை நிறைவேற்றி தர தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், சிலைகளை பாதுகாக்க அறநிலைய துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பல சிலைகள் அழியும் நிலையில் இருப்பதாகவும், ஐ.ஜி. பொன் மாணிக்கல்வேல் தெரிவித்தார்.

 

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, 50 ஆண்டுகள் பழமையான  சிலைகளை இருட்டு அறையில்  வைப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை எதற்கு என்று கேள்வி எழுப்பினார்.

 

மேலும் தான் நேரில் சென்று பார்த்த 1,700 கோவில்களிலும்  இதே நிலை  தான் இருப்பதாகவும் நீதிபதியிடம் வேதனை தெரிவித்தார்.

 

உயர் நீதிமன்றம் பிறப்பித்த 21 வழிமுறைகளை நிறைவேற்றுவது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் மற்றும் ஐஜி பொன் மாணிக்க வேல், அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆகியோர் கலந்தாலோசித்து  23 ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

 

இதற்கிடையில், ஸ்தபதி முத்தையாவின் முன் ஜாமீன் மனுவும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்த அரசுத்தரப்பு, முத்தையா  விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.  இந்த வழக்கின் விசாரணை 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

- சி.ஜீவா பாரதி

சார்ந்த செய்திகள்