2006ம் ஆண்டில் திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தில் முறைகேடுகள் இருப்பதாக 2015-ம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதுகுறித்து விளக்கமளிக்க கேட்டு திமுக தலைவர் கருணாநிதிக்கு ஆணையம் சம்மன் அனுப்பியது. இதை ரத்து செய்ய கோரி முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது “புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டியதில் முறைகேடு தொடர்பாக விசாரனை நடத்த ரகுபதி கமிஷனுக்கு இடைக்கால தடை விதித்து, 3 ஆண்டுகள் ஆகியும் விசாரனை கமிஷன் ஊதியம் வழங்கப்படுகிறது. இவ்வாறு மக்கள் வரிப்பணம் வீணாவதை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது என நீதிபதி ஆவேசமடைந்தார். இத்தகைய அரசு செயல்பட்டால் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் அமைக்கப்படும் விசாரணை ஆணையத்தின் மீது பொது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். வேறும் கண்துடைப்புக்காவே இது போன்ற விசாரணை ஆணையத்தை அரசு அமைத்துள்ளது என கருதுவதாக கூறிய நீதிபதி,
தமிழகத்தில் எத்தனை விசாரனை ஆணையங்கள் உள்ளது?,அதில் எத்தனை பேர் பணியாற்றுகிறார்கள்?,எத்தனை அரசு வாகனங்கள் அவர்களுக்காக பயன்படுத்தப்படுகிறது?,அவர்களுக்கு செலவிடும் தொகை எவ்வளவு ?
எத்தனை பங்களாக்கள் விசாரணை ஆணைய அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என பல கேள்விகளை அரசுக்கு கேள்விகளை எழுப்பினார்.
அரசு தரப்பில் பதிலளிக்க அளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது. அதற்கு கால அவகாசம் வழங்கும் ஒவ்வொரு நொடியும் மக்களின் வரி பணம் வீணாகிறது.
விசாரனை ஆணையங்கள் அமைத்து தமிழக அரசு சாதித்தவை என்ன ? எனவே கால அவகாசம் வழங்க முடியாது. மதியமே தெரிவிக்க நீதிபதி அறிவுறுத்தறுத்தினார்.
இதையடுத்து உடனடியாக தலைமை அரசு வழக்கறிஞர் விஜய் நாராயண் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அப்போது நீதிபதியின் கேள்விகளுக்கு பதில் அளிக்க அவகாசம் கோரினார். புதிய தலைமை செயலக வழக்கில் ஊழல் நடைப்பெற்றதற்கு ஆதாரங்கள் உள்ளது என தெரிவித்தார். இதை கேட்ட நீதிபதி ஆதரங்கள் இருந்தால் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டியது தானே ஏன் தேவையில்லாமல் விசாரனை ஆணையம் அமைத்து மக்களின் வரியை வீணடிக்கீறிர்கள் என்றார். இடைக்கால தடை விதித்து 3 வருடமாக ஆகியும் கூட ரகுபதி கமிஷன் குறித்து நீதிமன்றத்தில் ஒரு பதில் மனு தாக்கல் செய்யவில்லை, இடைக்கால தடையை நீக்க கூட மனு தாக்கல் செய்யவில்லை என்றால் உள்நோக்கம் ஏதும் அரசுக்கு உள்ளது என்றார்.
இது தொடர்பாக ஆக்ஸ்ட் மாதம் 1 ம் தேதி அரசு பதிலளிக்க வேண்டும், விசாரனை கமிஷன் அமைப்பதற்கான விதிமுறைகளை இந்த நீதிமன்றம் வகுக்கும். அன்றைய தினம் ரகுபதி கமிஷன் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என ஒத்திவைத்தார்.