Skip to main content

திமுகவில் இணையும் நாம் தமிழர் உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர்

Published on 24/01/2025 | Edited on 24/01/2025
We are alternative parties including naam tamilar ​​joining DMK

பெரியாரை இழிவுபடுத்தி பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திராவிட அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. நேற்று சீமான் வீடு அமைந்துள்ள நீலாங்கரை பகுதியில் மே 17 இயக்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது. அதேநேரம் ஈரோடு இடைத்தேர்தலில் திமுக, நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரத்தை தொடங்கி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சிகளில் இருந்து  விலகி 3000 பேர் திமுகவில் இணைகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இணைகின்றனர். அண்ணா அறிவாலயத்தில் இந்த நிகழ்வு  நடைபெறுகிறது. நாம் தமிழர் கட்சியில் இருந்து ஒரு மண்டல செயலாளர், மூன்று மாவட்ட செயலாளர்கள் என பலர் திமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்