Skip to main content

தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி - வேலூரில் மக்கள் குறை தீர்வு கூட்டங்கள் ரத்து

Published on 05/07/2019 | Edited on 05/07/2019

 

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 5ந்தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் ஜீலை 4ந்தேதி மதியம் டெல்லியில் அறிவித்தது. 

வ்

 

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்தும் நடைமுறைக்கு வந்துள்ளன. இதனை தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அரங்கில் ஆட்சியர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்படுகிறது.    அதோடு, விவசாயிகள் குறை தீர்வு கூட்டம், ஊனமுற்றோர் குறை தீர்வு கூட்டம் உட்பட அனைத்து கூட்டங்களும் ரத்து செய்யப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் அலுவலம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர், அனைத்து துறை அதிகாரிகளுக்கான கூட்டத்தை ஜீலை 5ந்தேதி கூட்டியுள்ளார். 

சார்ந்த செய்திகள்