Skip to main content

“ஊரடங்கு மீறி சுற்றித் திரிந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்..” - டி.ஐ.ஜி. எச்சரிக்கை!

Published on 24/05/2021 | Edited on 24/05/2021

 

"Vehicles will be confiscated if they turn around in violation of the curfew." - DIG

 

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஊரடங்கை மீறி சுற்றித் திரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஐ.ஜி. முத்துச்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தியிருக்கிறது. அதைத் தொடர்ந்து திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள பஸ் ஸ்டாண்டு, வெள்ளை விநாயகர் கோயில், நாகல்நகர், மேட்டுப்பட்டி, பேகம்பூர், பழனி ரோடு உள்ளிட்ட பல இடங்களில் டி.ஐ.ஜி. முத்துச்சாமி திடீரென ஆய்வு மேற்கொண்டார். 

 

அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் டி.ஐ.ஜி. முத்துச்சாமி பேசும்போது, “கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளற்ற முழு ஊரடங்கு திண்டுக்கல் தேனி மாவட்டங்களில் தீவிரமாக அமல்படுத்தப் போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்திரிகை, தொலைக்காட்சி நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களைப் போலீசார் தடுத்து நிறுத்தக் கூடாது, மருத்துவமனைகள், மருந்தகங்கள், கால்நடை மருந்துகள், நாட்டு மருந்து கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், ஏடிஎம் மையங்கள் தவிர மற்ற எந்தக் கடைகளும் நிறுவனங்களும் செயல்படாமல் போலீசார் பார்த்துக்கொள்ள வேண்டும். 

 

மருத்துவ காரணம், இறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து திண்டுக்கல்லுக்கு வாகனங்களில் வருபவர்கள் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும். இதனை போலீசார் சோதனை செய்த பின்னரே அவர்களை நகருக்குள் அனுமதிக்க வேண்டும். அதுபோல் குடிநீர் விநியோகம், பத்திரிகை விநியோகம், அத்தியாவசிய பொருட்கள் வேளாண்விளை பொருட்கள் விற்பனையைத் தடுக்கக் கூடாது. சரக்கு வாகனங்களைத் தொடர்ந்து செல்ல அனுமதிக்க வேண்டும். ஓட்டல்களில் காலை 6 மணிமுதல் 10 மணிவரையும், மதியம் 12 மணிமுதல் 3 மணிவரையும் இரவு 6 மணிமுதல் 9 மணிவரை மட்டுமே உணவுப் பொருட்கள் பார்சலில் வழங்க போலீசார் அனுமதிக்க வேண்டும். ஊரடங்கை மீறி சுற்றித் திரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

காற்றில் பறக்கும் தேர்தல் விதிமுறை-நிலக்கோட்டையில் அதிகாரிகளின் மெத்தனம்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Is there an election? Or not?- Complacency of authorities in Nilakottai

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை தொகுதியில் தேர்தல் நடைமுறைகள் அமல்படுத்துவதில் அரசு அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

நிலக்கோட்டை பேருந்து நிலையம் அருகே நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் அலுவலகம் உள்ளது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று தேர்தல் தேதி அறிவித்தும் கூட இதுவரை சீல் வைக்கப்படவில்லை. எம்.எல்.ஏ தேன்மொழி ஆதரவாளர்கள் வழக்கம்போல்  சட்டமன்ற அலுவலகத்தை பூட்டிச் சென்ற பூட்டு மட்டுமே அங்கு காட்சிப் பொருளாக தொங்குகின்றதே தவிர தேர்தல் விதி முறைகளின்படி அந்த அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைக்காமல் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருகிறார்கள்.

இதே போல் தொகுதி முழுவதும் கொடிக் கம்பங்கள் அகற்றப்படவில்லை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவரும் சாலையில் வைத்துள்ள பேனர்கள் அப்படியே இருக்கிறது. தொகுதியில் தேர்தல் நடக்கிறதா? இல்லையா? என பொதுமக்கள் கேட்கும் அளவிற்கு அதிகாரிகளின் செயல்பாடு மெத்தனமாக உள்ளதாகக் குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.