Skip to main content

முழு முடக்கம்! மீன் சந்தையில் குவியும் மக்கள்! 

Published on 08/01/2022 | Edited on 08/01/2022

 

Trichy fish market rushed
மாதிரி படம் 

 

தமிழ்நாட்டில் கரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் உயர்ந்துவருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. அதில் முக்கியமாக வார இறுதி நாளும், விடுமுறை நாளுமான ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், இன்று பொதுமக்கள் உணவுகளுக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள் இறைச்சி வகைகளை வாங்க மார்க்கெட்டில் குவிந்து வருகின்றனர்.

 

திருச்சி குழுமணி சாலையில் உள்ள காசிவிளங்கி மீன் சந்தையில் மீன் இறைச்சிகள் வாங்க தனிமனித இடைவெளி இன்றியும், முகக் கவசம் அணியாமலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாட்டுப் பொங்கல் நாளில் களை கட்டிய மீன் விற்பனை

Published on 16/01/2024 | Edited on 16/01/2024
Sale of  fish on Mattu Pongal day

இன்று தமிழகத்தில் மாட்டுப் பொங்கல் விழா கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் வேதாரண்யத்தில் மீன் வாங்க அசைவ பிரியர்கள் திரண்டனர். இதனால் அதிகப்படியான மீன் விற்பனை நடைபெற்றது.

வேதாரண்யம் கோடியக்கரை கடற்கரை பகுதியில் இன்று காலை முதலே மக்கள் அலை அலையாக கூடினர். வஞ்சிரம், காலா, வாலை, அயிலை, திருக்கை,சங்கரா, வவ்வால், நெத்திலி, கிழங்கான் ஆகிய மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். வௌவால் மீன் கிலோ ரூபாய் 1100 க்கும், வஞ்சிரம் கிலோ 700 ரூபாய்க்கும், இறால், நண்டு ஆகியவை 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சில பகுதிகளில் மாட்டுப்பொங்கல் அன்று அசைவம் சாப்பிடுவது ஒரு பழக்கமாக இருக்கும் நிலையில் மீன் வியாபாரம் இன்று களைகட்டியுள்ளது. அதேபோல் கும்பகோணத்தில் உள்ள பெரியார் மீன் அங்காடியிலும் கட்லா, ரோகு, ஜிலேபி, கெளுத்தி, சண்டை உள்ளிட்ட மீன்கள் மட்டுமல்லாது கடல் மீன்களும் விற்பனைக்கு குவிக்க வைக்கப்பட்டது. விலை வழக்கத்தை விட சற்று அதிகமாக இருந்த போதிலும் மக்கள் போட்டி போட்டு மீன்களை வாங்கிச் சென்றனர். இதேபோல் செய்யாறு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மீன் மார்க்கெட்டுகளிலும் கூட்டம் இன்று அலை மோதியது.

Next Story

திடீரென மீன் மார்க்கெட்டில் நுழைந்த அதிகாரிகள்; எடை இயந்திரங்கள் பறிமுதல்

Published on 31/08/2023 | Edited on 31/08/2023

 

Unresealable weighing machines seized at Chindaripet fish market

 

சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் இன்று தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் சுபாஷ் சந்திரன் தலைமையில் 15க்கும் மேற்பட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். காவல்துறையினரும் இந்த ஆய்விற்கு உதவி புரிந்தனர்.

 

சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் பயன்படுத்தக்கூடிய எடை இயந்திரங்கள் மறுமுத்திரை இடாமல் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில், இந்த ஆய்வு மேற்கொண்டதாகத் தெரிகிறது. சட்டமுறை எடையளவுச் சட்டம் என்ற சட்டத்தின்படி நுகர்வோர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு வணிக நிறுவனங்களில் எடை மற்றும் அளவுகளை உறுதிப்படுத்த இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

 

ஒவ்வொரு வருடமும் எடை இயந்திரத்தைச் சரி பார்த்து தொழிலாளர் நலத்துறை மூலமாகச் சான்றிதழைப் பெற வேண்டும். அதற்கான முத்திரை இடுவார்கள். அப்படி மறு முத்திரை இல்லாமல் வைத்திருக்கக்கூடிய எடை இயந்திரங்கள் தவறான முறையில் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. அதன் அடிப்படையில், மீன் மார்க்கெட்டில் பயன்படுத்திய சுமார் 60க்கும் மேற்பட்ட மறு முத்திரையிடப்படாத எடை இயந்திரங்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் மறு முத்திரையிடாத கடையின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.