Skip to main content

திருச்சி மத்திய சிறையில் வெளிநாட்டு கைதிகள் தற்கொலைக்கு முயற்சி!

Published on 08/11/2019 | Edited on 08/11/2019

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகள் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இதில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள், கடத்தல் மற்றும் பாஸ்போர்ட் இன்றி சட்டவிரோதமாக தங்கியிருத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் பல்கேரியா, ஜெர்மன், சீனா, பங்களாதேஷ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 72 பேர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்
 

TRICHY CENTRAL JAIL FOREIGN PRISONERS TAKE WRONG DECISION



இவர்களின் தண்டனை காலம் முடிந்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக போதுமான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல், உணவுகள் பட்டினி கிடந்து அவதிப்படுவதாகவும், உறவினர்கள், நண்பர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் பார்ப்பதற்கும் பேசுவதற்கும் அகதிகள் அனுமதிப்பதில்லை என்று குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையை கண்டித்து 07.11.2019 முதல் அங்கிருந்த 70 பேர்களில் 46 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாம் நாளான  இன்று அவர்களில் 20 பேர் தூக்கமாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்கள்.
 

இதுகுறித்து சிறப்பு துணை தாசில்தார் சுந்தரராஜன் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றார். தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிப்பதற்கான பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவத்தால் சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்