Skip to main content

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல்..? - சத்யபிரதா சாகு விளக்கம்!

Published on 04/01/2021 | Edited on 04/01/2021

 

gh

 

தமிழகத்தில் 2 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்துக்குப் பரிந்துரை செய்யவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் விரைந்து செய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியாகியிருந்தது. இதற்கிடையே இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமை தேர்தல் ஆணையர், "தமிழகத்தில் 2 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தலை நடத்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தேர்தல் ஆணையத்துக்கும் நாங்கள் பரிந்துரை செய்யவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்