Skip to main content

RTE- யின் 25 விழுக்காடு இடங்களை ஆன்லைன் கலந்தாய்வு மூலம் நிரப்ப தமிழக அரசு திட்டம்!

Published on 18/05/2019 | Edited on 18/05/2019

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் (RIGHT TO EDUCTION ACT - 2009) கீழ் தனியார் பள்ளிகளில் உள்ள 25 விழுக்காடு இடங்களை ஆன்லைன் மூலம் நிரப்ப தமிழக பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2019-2020 கல்வி ஆண்டிற்கான கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் குழந்தைகளை தனியார் மெட்ரிக் பள்ளிக்களில் (TN PRIVATE MATRIC SCHOOLS) சேர்ப்பதற்கான ஆன்லைன் விண்ணப்பம் ஏப்ரல் 22 ஆம் தேதி தொடங்கி இன்று இரவு விண்ணப்பிக்க கடைசி நாள் என தமிழக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் அறிவித்திருந்தது. தமிழகம் முழுவதும் மொத்தம் 1 லட்சத்து 27 ஆயிரம் இடங்களில் , தற்போது வரை 1 லட்சத்து 17 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் தனியார் மெட்ரிக் பள்ளிகள் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 விழுக்காடு இடங்களை சரியான, தகுதியான மாணவர்களுக்கு வழங்கப்படுகிறதா? என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுகிறது.

 

 

RTE

 

 

மேலும் இத்தகைய இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் எவ்வித கட்டணத்தையும் செலுத்த தேவையில்லை. ஆனால் மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகம் கட்டணத்தை பெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதே போல் சில பள்ளிகள் ஆர்டியின் சட்டத்தை பின்பற்றாமல் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு சீட் வழங்கி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆன்லைன் கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் ஆர்டியின் சட்டத்தை தமிழகத்தில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு எப்படி ஆன்லைனில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறதோ. தமிழக சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தனி இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கும் வகையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்