Skip to main content

"சாதாரண தொண்டராக இருப்பது பெருமை"- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு...

Published on 27/12/2020 | Edited on 27/12/2020
ops

 

அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டராக இருப்பது கூட பெருமைதான் என்று தேர்தல் பிரச்சார தொடக்கப் பொதுக்கூட்டத்தில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அ.தி.மு.க. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வின் தேர்தல் பிரச்சார தொடக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள், அ.தி.மு.க. கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் முக்கிய தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

பொதுக்கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், "அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டராக இருப்பது கூட பெருமைதான். எளிய மக்களின் வாழ்க்கைத்தரம் உயர அ.தி.மு.க. ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மக்களுக்கு உணவு, உடை, உறைவிடத்தைத் தருபவர்கள்தான் சிறந்த ஆட்சியாளர்கள். அ.தி.மு.க. அரசு உணவு, உடை, உறைவிடத்தை வழங்கி சிறந்த ஆட்சியைத் தருகிறது. கல்வி, உணவு உற்பத்தி, தொழில்துறை என பல்வேறு துறைகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 

 

தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருவதால் மத்திய அரசை ஆதரிக்கிறோம். தமிழகத்திற்கு நலத்திட்டங்களைப் பெறும் நோக்கத்திற்காகவே மத்திய அரசை ஆதரிக்கிறோம். மத்திய அரசில் அ.தி.மு.க. அங்கம் வகிக்காதபோதும் பல்வேறு நலத்திட்டங்களைப் பெற்று தந்துள்ளோம். பல சோதனை, வேதனைகளைத் தாண்டி, அ.தி.மு.க.வை எஃகு கோட்டையாக மாற்றியவர் ஜெயலலிதா. அ.தி.மு.க.வினர் மத்திய அமைச்சராக இல்லாதபோதும் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளைப் பெற்றுள்ளோம். வெளிநாடு வாழ் தமிழர்களைக் காப்பாற்றும் தமிழ் இன உணர்வு கொண்ட அரசாக தமிழக அரசு உள்ளது. மக்களிடம் ஆட்சிக்கு உள்ள நல்ல பெயரை வாக்குகளாக மாற்றும் கடமை அ.தி.மு.க. தொண்டனுக்கு உண்டு. 2023- ஆம் ஆண்டுக்குள் வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்" என்றார்.

 

சார்ந்த செய்திகள்