Published on 15/08/2022 | Edited on 15/08/2022

இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்தது.
சென்னை தாம்பரம் அருகே உள்ள ஜிஎஸ்டி சாலையில் தனியார் நிறுவனத்தின் ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், குரோம்பேட்டையில் இருந்து தாம்பரம் நோக்கி அதிவேகமாக வந்த இளைஞர் ஒருவர் பேருந்து மீது மோதியுள்ளார்.
மோதிய வேகத்தில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. உடனடியாக, இருசக்கர வாகனத்தில் இருந்த நபர், தப்பியோடியுள்ளார். இந்த நிலையில், இரு சக்கர வாகனம் மற்றும் பேருந்து தீப்பிடித்து எரிந்துக் கொண்டிருந்தனர். தகவலறிந்துச் சென்ற தீயணைப்புத் துறையினர், உடனடியாக தீயைக் கட்டுப்படுத்தினர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.