தி.மு.க.சார்பில் இன்று தமிழகம் முழுக்க நடை பெற்ற கிராமசபை கூட்டத்தை தொடர்ந்து ஈரோட்டில் இன்று லக்காபுரம், கஸ்பா பேட்டை, எலவுமலை ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
கிராமசபையில் ஆண்கள், பெண்கள் நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டு சாலை வசதி, குடிநீர், மின்சாரம், கழிவு நீர் வசதி மற்றும் முதியோர் உதவித் தொகை என ஏராளமான அத்தியாவசிய பிரச்சனைகளை கூறினார்கள் அதன் பிறகு பேசிய துரைமுருகன்.
இந்த அரசுக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இது மக்களுக்கும். அரசுக்கும் நல்லதல்ல. அதிகாரிகள்தான் அரசை வழிநடத்துவார்கள். எனவே இந்த அரசு அதிகாரிகளிடமும் நிர்வாகத்திற்கும் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்" என்றவர் மேலும்
மக்கள் குடிநீர் , முதியோர் உதவித்தொகை , நூலகம் போன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் கேட்டு மனு அளித்துள்ளார்கள். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ கள் பொதுமக்களிடம் செல்வதில்லை அவர்களின் பிரச்சனைகளை கேட்பதில்லை. தி.மு.க. தலைவர் எங்களிடம் .மக்களை சந்தியுங்கள், குறைகளை கேளுங்கள் , நம்மால் முடியாவிட்டாலும் மக்களுக்கு ஒரு ஆறுதல் கிடைக்கும் என சொன்னார்.. மக்களை சந்திப்பது தான் மகத்தான வெற்றி என்றார்.
தமிழகத்தில் மிகவிரைவில் ஆட்சிமாற்றம் வரும். அப்போது இந்த பிரச்சனைகளை ஒரு மணி நேரத்தில் நாம் தீர்ந்துவிடுவோம்." என்றார் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன் ,"ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து இவ்வளவு பிரச்சினை வரும் என்று தெரிந்துதான் அப்போதே திமுக தலைவர் தளபதி மு க ஸ்டாலின் அவர்கள் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கூறினார் .
தமிழகத்தில் சிலை திருட்டு கேடுகெட்ட செயல். கலை உணர்வு மிக்க சிலை திருடு போவது நாட்டிற்கே அவமானம். அதை அதிகாரி பொன்.மாணிக்கவேல் தேடி தேடி கண்டுபிடிக்கிறார். அவருக்கு ஊக்கம் அளிக்க வேண்டியது அரசின் கடமை. நீதிமன்றம் சொல்லிய பிறகும் அமைச்சர் ஒருவர் அவர் யோக்யமானவரா என கேட்கிறார். இதையெல்லாம் பார்க்கும் போது, சிலை திருட்டைமறைமுகமாக அரசே ஆதரிக்கிறதா என ஐயம் ஏற்படுகிறது.
ஸ்டெர்லைட் விவகாரம் குழப்பமான நிலையில் உள்ளது. அரசுக்கே இது தொடர்பான தெளிவான நிலை இல்லை. இதுகுறித்து முதலமைச்சரை கேட்டாலும் இதைப் பற்றி தனக்கு தெரியாது என கூறுகிறார். இதுபோல கூறுவதற்கு அரசாங்கம் வெட்கப்படுவதாக தெரியவில்லை" என்றார்.