Published on 04/06/2019 | Edited on 04/06/2019
இளையராஜா இசையமைத்த பாடல்களை அவரது அனுமதியின்றி பயன்படுத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. AGI நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இளையராஜா ராயல்டி தொகையை கேட்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அவரின் பாடல்களை பயன்படுத்த அனுமதிக் கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதனை விசாரித்த நீதிமன்றம் இளையராஜாவின் அனுமதியின்றி அவரின் பாடல்களை பயன்படுத்த தடை விதித்து ஏற்கனவே விதித்த இடைக்கால தடையை உறுதி செய்தது.அவர் உருவாக்கிய பாடலுக்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.