Skip to main content

முத்ரா கடன் கேட்டு ஆயிரக்கணக்கில் பெண்கள் கூட்டம்.! மாவட்ட நிர்வாகத்துடன் மோதிய பா.ஜ.க.!

Published on 04/09/2018 | Edited on 04/09/2018
m


 

    முத்ரா கடன் திட்டத்தில் கடன் கேட்டு ஆயிரக்கணக்கான பெண்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கூட, அங்கிருந்த பா.ஜ.க.வினருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் மோதல் ஏற்பட்டதால் அந்த இடமே பரப்பரப்புக்குள்ளானது.


 

mla

   

வாரம் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் நாளில் மனுக்கள் பெறப்பட்டு வருவது வழக்கம் அதுபோல் இன்று சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மத்திய அரசின் முத்ரா கடன் திட்டத்தில் கடன் கேட்டு மனுகொடுக்க கிராம மக்கள் திடீரென 1000 கணக்கானோர் கூடினர். " முத்ரா கடன் திட்டத்தில் கடன் கேட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயகாந்தனிடம் மனுகொடுக்க வந்ததாக அவர்கள் கூறிவிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் கூட்டத்திற்கு வராததால் மாவட்ட வருவாய் அலுவலர் லதாவிடம் மனுவை கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட நிர்வாகமோ, " இந்த கடன் சம்மந்தமாக மத்திய வங்கியை நீங்கள் நாடவேண்டும்." மேலும் தகுதி உள்ளவர்களுக்கு இந்த கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றது என்று எடுத்துக்கூறியது, அப்போது அங்கு வந்த மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் சொக்கலிங்கம் மாவட்ட நிர்வாகதிடம், " இது மத்திய அரசுக்கு எதிராக சிலர் வாந்திகளை கிளப்பியதால் பொதுமக்கள் திரளாக மனுகொடுக்க வந்துள்ளனர். அவர்கள் ஏமாற்றமடையாமல் இருக்க மனுக்களை பெறவேண்டாம்." என அழுத்தமாகக் கூற,  " பொதுமக்கள் எதற்காக மனுகொடுத்தாலும் அதை வாங்கவது எங்களது கடமை, மனுவை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது." என்றும் கூறியது மாவட்ட நிர்வாகம். அதெப்படி நாங்கள் சொல்கிறோம். மனுக்களை வாங்காதீர்கள்.! என மறுபடியும் பா.ஜ.க.சார்பில் அழுத்தம் கொடுக்க, போலீஸார் தலையிட்டு கூடியிருந்த பெண்களை கலைத்தும், பா.ஜ.க.வினரை அப்புறப்படுத்தியும் பிரச்சனை ஏற்படாதவண்ணம் பார்த்துக்கொண்டனர். இதனால் அந்த இடமே பரப்பரப்புக்குள்ளானது.

 

சார்ந்த செய்திகள்