தமிழகத்தில் மார்ச் 1ம் தேதி பிளஸ்- 1 மற்றும் பிளஸ் -2 ஆகிய மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் தொடங்கவுள்ளது. தேர்வுக்கான ஏற்பாடுகள் தமிழகம் முழுக்க தீவிரமாக நடந்து வருகின்றன. அதன்படி ஈரோட்டில் கல்வி அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு நிலை அலுவலர்களாக 208 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிளஸ்- 2 தேர்வு மார்ச் 1ல் துவங்கி ஏப்ரல் 6ல் நிறைவு பெறுகிறது. இத்தேர்வுக்காக ஈரோடு மாவட்டத்தில் 83 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிளஸ் 1 தேர்வு மார்ச் 7ல் துவங்கி ஏப்ரல் 16ல் நிறைவு பெறுகிறது. இத்தேர்வுக்காக 83 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் ஈரோடு கல்வி மாவட்டத்தில் 3 இடங்கள், கோபி கல்வி மாவட்டத்தில் 5 இடங்கள் என மொத்தம் 8 இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு முதன்மை கண்காணிப்பாளர்கள், வழித்தட அலுவலர்கள் தேர்வு மற்றும் ஆலோசனை முகாம் ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் பங்கேற்றனர். 208 பேர் பல்வேறு நிலை அலுவலர்களாக தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டனர்.
இதேபோல் தமிழகம் முழுக்க அனைத்து மாவட்டங்களிலும் பொதுத் தேர்வு நடத்த கல்வி துறை அதிகாரிகள் தயார்படுத்தி வருகிறார்கள்.