![](http://image.nakkheeran.in/cdn/farfuture/PNB2lUOmFJU82mYoQPC9yT5qZLchBSu-n7aIeYoHsnI/1533347682/sites/default/files/inline-images/thirunavukkarasar%20600.jpg)
அமித்ஷா வருகையால் பாஜகவுக்கு விடியல் ஏற்பட போவதில்லை, மாறாக பாஜகவுக்கு அமாவாசையாகத்தான் இருக்கும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
லோக் ஆயுக்தா மசோதா குறித்து எல்லோருடைய கருத்துக்களை கேட்டறிந்து தாக்கல் செய்யப்பட்டால் இன்னும் வலுவாக இருக்கும். பிற கட்சிகளின் கருத்துகள் மற்றும் திருத்தங்களை ஏற்று லோக் ஆயுக்தா தாக்கல் செய்ய வேண்டும்.
எல்லா கட்சிகளின் கருத்தை கேட்டு மாநில மத்திய தேர்தல் நடத்த வேண்டும். ஒரே நேரத்தில் தேர்தல் வைத்தால் செலவு குறைவு என்பதற்காக தேர்தல் நடத்த கூடாது. நீதிபதி சுந்தரத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தது கண்டனத்துக்கு உரியது. நீதிபதியை மிரட்டுவது ஜனநாயகத்திற்கு எதிரானது.
அமித்ஷா வருகையை பெரிதாக பேசுகின்றனர். மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அவர் ஒன்றும் கிருஷ்ண பரமாத்மா அல்லது ஏசு பிரானோ கிடையாது. அமித்ஷா ஒருமுறை அல்லது 1,000 முறை வந்தாலும் ஒரு மாற்றமும் ஏற்பட போவதில்லை. அமித்ஷா வருகையால் பாஜகவுக்கு விடியல் ஏற்பட போவதில்லை. அவர்களுக்கு அம்மாவாசையாகத்தான் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.