தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசரை மாற்றக்கோருவது குறித்து அக்கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் விளக்கம் அளித்துள்ளார்.
அவர், திருநாவுக்கரசருக்கு யாரும் நெருக்கடி தரவில்லை. அவர் ஒரு இன்ச் கூட வேலை செய்யவில்லை. அவருக்கு காங்கிரஸ் என்ற எண்ணமே இல்லை. காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற எண்ணமே திருநாவுக்கரசருக்கு இல்லை. பலமாக இருக்கும் இயக்கத்தை பலவீனப்படுத்தும் வகையில் செயல்பாடு உள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியை சரியாக நடத்தாத காரணத்திலால்தான் மாற்ற கோருகிறோம். திருநாவுக்கரசரை நீக்க வேண்டும் என உண்மையான தொண்டர்கள் விரும்புகின்றனர். 10 மணிக்கு கூட்டம் என்றால் 12 மணிக்குத்தான் வருவார். மைக்கை பிடித்துவிட்டால் அதை கீழே வைக்கவே திருநாவுக்கரசருக்கு மனம் வராது. பிற கட்சியின் முன்னாள் தலைவர்களை புகழவ்தில் தவறில்லை. புகழ்வதற்கும் ஒரு அளவு வேண்டும். ஜால்ரா தட்டக்கூடாது. அதிமுக, பாஜக பற்றியே எல்லா கூட்டத்திலும் பேசிக்கொண்டிருக்கிறார். கடைசியில்தான் காங்கிரஸ் கட்சி பற்றிபேசுகிறார். யார்தான் பேச்சை கேட்பார்கள். விரைவில் மாற்றம் வரும். ராகுல்காந்தி அதற்கான நடவடிக்கையை எடுப்பார் என்று தெரிவித்துள்ளார்.