Skip to main content

கை கொடுத்த ராணுவ ஹெலிகாப்டர்; கர்ப்பிணி பெண் உட்பட குழந்தைகளை காப்பாற்றிய திக் திக் காட்சி

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
Thik Thik scene that rescued the children including the pregnant woman by the army helicopter that gave them a hand

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் முன்னெச்சரிக்கை கருதி நிறுத்தி வைத்த ரயிலில் இருந்து 300 பேர் மீட்கப்பட்டு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ரயில் நிலையத்தில் மீதமுள்ள 530 பயணிகளுக்கு உணவு வழங்க மதுரை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்ற நிலையி மீட்க முடியாத நிலை ஏற்பட்டது.

இரண்டு டன் உணவு, தண்ணீருடன் புறப்பட்ட ஹெலிகாப்டர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவு வழங்க முடியாத சூழலும் ஏற்பட்டது. இதனால் ரயில் நிலையத்தில் சிக்கியுள்ள 530 பயணிகளை மீட்க முடியாமல் திரும்பி சென்றது. ரயில் நிலையத்தில் ஒரே ஒரு கழிவறை மட்டுமே உள்ள நிலையில் அடிப்படை வசதிகள் ஏதுமில்லாமல் மூன்றாவது நாளாக 530 பயணிகள் தவித்து வந்தனர். தொடர்ந்து பயணிகளை மீட்பதற்கான பணிகள் நடைபெற்றது.

இந்த நிலையில், சூலூரில் இருந்து வந்த இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டரின் உதவியுடன் கர்ப்பிணி பெண்,  3   குழந்தைகள் என மொத்தம் நான்கு பேர் மட்டும் பத்திரமாக மீட்கப்பட்டு மதுரை அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்திய விமானப்படையில் இணைய பக்கத்தில் இது தொடர்பான தகவல், மீட்பு வீடியோவுடன் வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் மற்ற பயணிகள் எப்பொழுது மீட்கப்படுவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சார்ந்த செய்திகள்