Skip to main content

'கூட்டணி ஆட்சி என்பதே கிடையாது... ஆனால்'- அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி

Published on 29/10/2024 | Edited on 29/10/2024
nn

திண்டுக்கல்லில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது விஜய்யின் பேச்சு குறித்தும், திராவிட மாடல் அரசு குறித்து வைத்த குற்றச்சாட்டு குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, ''ஒண்ணுமே இல்லை நிறையப் பேர் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். 73 ல் எம்ஜிஆரை பார்த்துவிட்டு திமுக வந்திருக்கிறது. யாரைப் பார்த்தும் திமுக அஞ்சாது. எல்லா அரசியல் போராட்டங்களையும் சந்தித்த ஒரு இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். 75 ஆண்டுகள் கடந்து வந்திருக்கிறோம். இப்பொழுதும் சொல்கிறேன் இன்னும் நூறாண்டு ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காக உழைக்க கூடிய இயக்கமாக, போராடக்கூடிய தலைவர்களை கொண்டதாக, மக்களின் தலைவர்களாக யார் இருப்பார்கள் என்றால் என் மு.க.ஸ்டாலின் தான் இருப்பார்.  

எங்களுக்கு அரசியலில் யார் வேண்டுமானாலும் வரட்டும் சந்தோஷம் மகிழ்ச்சி. ஒருவர் அரசியல் கட்சி தொடங்கினார் என்பதனால் எங்களுக்கு கஷ்டம் வரும் என்றெல்லாம் இல்லை. எங்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது.  மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். மக்களுடைய இயக்கமாக திமுக இருக்கிறது. இதுவரை நாங்கள் தமிழ்நாட்டில் எத்தனை முறை ஆட்சிக்கு வந்திருக்கிறோம் என்பது தெரியும். கலைஞர் ஐந்து முறை ஆட்சி செய்திருக்கிறார். அண்ணா தலைமையில் ஒருமுறை இருந்திருக்கிறோம். அதற்குப் பிறகு மு.க.ஸ்டாலின் தலைமையில் இருக்கிறோம். இன்னும் தொடர்ந்து வரப் போகிறோம். கொள்கைகளை ஏற்றுக் கொண்ட இயக்கங்கள் எங்களுடன் கூட்டணியில் இருக்கிறார்கள். ஆகவே  பதவி என்பதை அவர்கள் விரும்பவில்லை என்பதுதான் என்னுடைய கருத்து. தனித்து தான் திமுக ஆட்சியில் இருந்திருக்கிறது.  ஏழு முறை ஆட்சிக்கு வந்திருக்கிறோம் தமிழ்நாட்டில். கூட்டணி ஆட்சி என்பதே கிடையாது. ஆனால் வருகின்ற காலத்தில் நிச்சயமாக சொல்கிறேன் எங்களுடைய தலைவர் கொள்கைத் திட்டங்களை அறிவிப்பார். அதற்கேற்றார் போல் தேர்தல் களம் அமையும்''என்றார்.

சார்ந்த செய்திகள்