Skip to main content

ஐ.பி.யிடம் ஆசி வாங்கிய தேனி பொறுப்பாளர்கள்!

Published on 04/07/2018 | Edited on 04/07/2018
nw


தமிழகம் முழுவதும் திமுக பொறுப்பாளர்களை செயல் தலைவர் ஸ்டாலின் களை எடுத்து வருகிறார். அதுபோல் தேனி மாவட்ட பொறுப்பாளராக இருந்து வந்த ஜெயக்குமாரை  அதிரடியாக மாற்றிவிட்டு  முன்னாள்  எம்.எல்.ஏ.வான கம்பம் ராமகிருஷ்ணனை தேனி மாவட்ட  பொருப்பாளராக  நியமித்தார்.  இதனால்  ஜெயக்குமார்  ஆதரவாளர்கள் மத்தியில்  ஒரு புரம்  அதிருப்தி இருந்தாலும் பெரும்பலான உ.பி.கள் மத்தியில்  ராமகிருஷ்ணனை மாவட்ட பொறுப்பாளராக போட்டதை  வரவேற்று வருகிறார்கள்  அதுபோல் முன்னாள் எம்எல்ஏகளான மூக்கையா. லட்சுமணன். கம்பம் செல்வேந்திரன் உள்பட மாவட்டத்தில் உள்ள  கழக நிர்வாகிகள்   அனைவரும்  ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்து  தெரிவித்தனர்.  அதுபோல்  பதவி பறிக்கப்பட்ட ஜெயக்குமாரும் நேரில் சென்று  வாழ்த்து தெரிவித்துள்ளார்.


            இந்த நிலையில் தான் கழக துணை பொதுச் செயலாளரும்.முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமியை திண்டுக்கல்  இல்லத்தில் சந்தித்த கம்பம் ராமகிருஷ்ணனோ அவருக்கு  ஏலக்காய்  மாலை  அணிவித்து  ஆசி வாங்கினார். அதை தொடந்து தேனி மாவட்டத்தில்  புதிதாக நியமிக்கப்பட்ட  தேனி ஒன்றிய  பொறுப்பாளர் சக்கரவர்த்தி  உள்பட  பல பொருப்பாளர்களும்  புதிய பொறுப்பாளர் ராமகிருஷ்ணனுடன் வந்து  ஐ.பி.க்கு சால்வை, மாலை அணிவித்து ஆசி பெற்று  சென்றனர்
.        கழக துணைப் பொதுச் செயலாளரான ஐ.பி. தென் மாவட்டத்தை பொருத்தவரை கட்சியில்  முக்கிய விஐபி யாக  இருந்து  வருகிறார்  அதோடு தேனி மாவட்டத்தை பொறுத்தவரை  ஐ.பி.தான் கட்சி வளர்ச்சிக்கும்  கட்சி  பொறுப்பாளர்களையும் நியமிக்க செயல் தலைவர்  ஸ்டாலினுக்கு ஆலோசனையும்  வழங்கி வருகிறார்.  அந்த  அடிப்படையில் தான்  தற்பொழுது  பதிய பொறுப்பாளர்   ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்  என்பது தெரிய வருகிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

"அதிமுக ஆட்சியில் புதிதாக ஒரு பகுதிநேர ரேசன் கடையைக் கூடத் திறக்கவில்லை"- அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு!

Published on 18/08/2022 | Edited on 18/08/2022

 

"In 10 years of ADMK government, not even a new part-time ration shop has been opened"- Minister I.Periyaswamy speech!


அ.தி.மு.க. ஆட்சியில் 10 வருடங்களில் புதிதாக ஒரு பகுதி நேர ரேசன் கடையைக் கூட திறக்கவில்லை என்று நரசிங்கபுரத்தில் நடைபெற்ற புதிய பகுதிநேர நியாயவிலைக் கடை திறப்பு விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம் சித்தையன்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட நரசிங்கபுரத்தில் டி.டி.36 சித்தையன்கோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சார்பாக புதிய பகுதிநேர கடை திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமை தாங்கினார். 

 

மண்டல இணை பதிவாளர் காந்திநாதன் வரவேற்று பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் லதா பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் திருமாவளவன், சரக துணை பதிவாளர் முத்துக்குமார், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 

விழாவில் நியாயவிலை கடையை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்துவிட்டு கூறுகையில், "கடந்த 10 வருடங்களுக்கு முன்பு தி.மு.க. ஆட்சியின்போது நான் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தேன். முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் உத்தரவுப்படி கிராமங்கள் தோறும் குறிப்பாக, 300 குடும்ப அட்டைகள் இருந்தால் அப்பகுதியில் பகுதிநேர நியாயவிலைக் கடையைத் திறந்து வைத்தோம். அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு ஆத்தூர் தொகுதியில் ஒரு நியாயவிலைக் கடையைக் கூட புதிதாக திறக்கவில்லை. 

 

நரசிங்கபுரத்தைச் சேர்ந்த கிராம மக்கள் தாங்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று ரேசன் பொருட்களை வாங்குகிறோம் என்று சொன்னார்கள். அந்த சிரமம் கூட அவர்களுக்கு இருக்கக் கூடாது என இன்று நரசிங்கபுரத்தில் பகுதிநேர நியாயவிலைக் கடையைத் திறந்து வைத்துள்ளோம், கடந்த தி.மு.க. ஆட்சியின் போது ஏழை, எளிய மக்கள் குறிப்பாக முதியோர்களுக்கு நாம் வழங்கிய நிவாரண உதவித்தொகையை கடந்த 10 வருடங்களாக அ.தி.மு.க. அரசு நிறுத்தி வைத்தது. 

 

தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முதியோர் உதவித்தொகை தற்போது வழங்கப்பட்டு வருகிறது. முதியோர்தொகை வேண்டி விண்ணப்பம் செய்தவர்களில் தகுதியானவர்கள் இருந்தால், அவர்களுக்கு உடனடியாக முதியோர் உதவித்தொகை வழங்கப்படும். கூட்டுறவுத்துறை வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் மற்றும் கடன் உதவிகளை நரசிங்கபுரத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால்நடை விவசாயிகள் வாங்கி பயனடை ய வேண்டும்" என்று கூறினார்.

 

 

Next Story

"கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள 4,500 பணியிடங்கள் ஒரு சில மாதத்தில் நிரப்பப்படும்"- அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு!

Published on 17/08/2022 | Edited on 17/08/2022

 

"4,500 vacancies in the cooperative sector will be filled in a few months" - Minister I. Periyasamy announced!

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இருக்கும் சித்தரேவு அரசு மேல்நிலைப் பள்ளியில் மக்களைத் தேடி முகாம் நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் விசாகன் தலைமையில் இன்று (17/08/2022) நடைபெற்றது. 

 

இந்த விழாவில், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு 3,747 பயனாளிகளுக்கு ரூபாய் 7.14 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வாங்கினார். விழாவுக்கு கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட ஊராட்சித் தலைவர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 

இந்த விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது, "ஆத்தூர் பகுதியில் தொடந்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சித்தரேவு பகுதியில் வாய்க்கால் சரி செய்யப்பட்டு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. குடிநீர் வழங்கும் பணிகள் தொய்வின்றி சீரக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அமைதி பூங்கா பகுதியில் மக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் இன்று நியாய விலைக்கடை திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

 

மேலும், இப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். முதியோர் உதவிக்தொகை கடந்த ஆட்சி காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் கடந்த ஓராண்டு காலத்தில் 2,500 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், வளர்ச்சித் திட்டங்கள் குறைபாடின்றி நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் அனைத்து வேலைவாய்ப்புகளும் வெளிபடை தன்மையுடன் நியமனம் செய்யப்படும் என்று உத்தரவிட்டுள்ளார்.  

 

மேலும், கூட்டுறவுத் துறையில் இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் 4,500 பணியாளர்கள் நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் வீடு இல்லாமல் இருப்போருக்கு ஏற்கனவே வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும், அனைவருக்கும் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும், ஆத்தூர் வட்டம், சித்தரேவு கிராமத்தில் நடைபெற்ற விழாவில் வருவாய்துறை சார்பில் 1,475 பயனாளிகளுக்கு ரூபாய் 3,27,46,130 மதிப்பீட்டிலும், வேளாண்மைத் துறையின் சார்பில் 499 பயனாளிகளுக்கு ரூபாய் 83,025 மதிபீட்டிலும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 157 பயனாளிகளுக்கு ரூபாய் 8,10,350 மதிப்பீட்டிலும், சமூக நலத்துறையின் சார்பில் 88 பயனாளிகளுக்கு ரூபாய் 22,00,000 மதிப்பீட்டிலும், மீன்வளத்துறையின் சார்பில் 56 பயனாளிகளுக்கு ரூபாய் 18,32,970 மதிப்பீட்டிலும், சுகாதாரத்துறையின் சார்பில் 296 பயனாளிகளுக்கு ரூபாய் 6,04,000 மதிப்பீட்டிலும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 135 பயனாளிகளுக்கு ரூபாய் 6,91,500 மதிப்பீட்டிலும், மகளிர் திட்டம் சார்பில் 330 பயனாளிகளுக்கு ரூபாய் 85,85,000 மதிப்பீட்டிலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சார்பில் 604 பயனாளிகளுக்கு ரூபாய் 2,33,25,332 மதிப்பீட்டிலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூபாய் 78,750 மதிப்பீட்டிலும், முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத் திட்டம் சார்பில் 20 பயனாளிகளும், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 83 பயனாளிகளுக்கு ரூபாய் 4,21,473 மதிப்பீட்டிலும் என மொத்தம் 3.747 பயனாளிகளுக்கு ரூபாய் 7.14 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.