Skip to main content

ஆடித்தள்ளுபடிக்காக அதிகாலையிலேயே குவிந்த பெண்கள்..!

Published on 17/07/2018 | Edited on 17/07/2018
lady


"சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு" என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப பெண்களை இயற்கையில் அழகாக காட்டுவது சேலை மட்டுமே.! அதிலும் பட்டுபுடவை உடுத்தினால் பெண்ணுக்கு கூடுதல் அழகுதான்..! அந்தளவிற்கு இளம்பெண்கள் தொடங்கி பேரிளம் பெண் வரை அனைத்து வகைப்பெண்களின் வாழ்வியலில் ஒன்றோடொன்றாக கலப்பது பட்டு புடவைகளே.! விலைகளால் மலைத்துப் போகும் பெண்களுக்கு வரப்பிரசாதமாக அமைவது ஆடித்தள்ளுபடிகளே.!
 

dsf


பெரும்பாலான சாமானியர்கள் வரவிருக்கும் வீட்டு விஷேடத்திற்கும், பண்டிகை காலத்திற்கும் தேவையான புடவைகளை ஒட்டுமொத்தமாக நுகர்வதும் இந்த ஆடித் தள்ளுபடிகளில் தான்.. இந்தத் தள்ளுபடிகளில் மற்ற ஆடைகளின் விலைக்குத் தள்ளுபடி தரும் நிறுவனங்கள், ஏனோ.! பட்டுப்புடவைக்கு தருவதில்லை. ஆனால், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த பிரபல பட்டு நிறுவனம் - திருமண மண்டபத்தினை வாடகைக்கு எடுத்து பட்டுச்சேலைக்கென ஆடித் தள்ளுபடி விலையை மாதத்தின் முதல் தேதியிலேயே அறிவித்துள்ளது.
 

lady


காரைக்குடியில் பட்டுத் தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்ட திருமண மண்டபத்தில் அதிகாலையிலேயே குவிந்தனர் அக்கம்பக்கத்திலுள்ள சிவகங்கை, திருப்பத்தூர் மற்றும் தேவக்கோட்டை பகுதி மக்கள். போதாக்குறைக்கு அருகிலுள்ள மாவட்டங்களான புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுர மாவட்ட மக்களும். பேன்சி பட்டுபுடவைகள் தொடங்கி ஜாங்குலா பட்டு (முகூர்த்தபட்டு புடவைகள்) காஞ்சிபுரம், கும்பகோணம், தர்மாபுரம், ஆரணி, ஓவியா மட்டும் பெங்களுர் பட்டு புடவைகள் அந்த மண்டபத்தில் குவிந்திருக்க, காத்திருந்த மக்களும் விற்பனை விலையிலிருந்து 20 % முதல் 70% வரை தள்ளுபடி விலையில் தேவைக்காக தேர்ந்தெடுத்து மகிழ்ந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்