மாமல்லபுரத்துக்கு சீனா அதிபா் வருகையையொட்டி சென்னை டூ மாமல்லபுரம் சாலைகள் பளீச் என மாறியது. இதற்கு, வெளிநாட்டு தலைவா்கள் வருகை தந்தாலே தமிழகமே பளீச் என்று ஆகி விடும் என்று நீதிபதிகளே கருத்து தெரிவித்தியிருந்தனா்.
இதே போல் தான் இந்த ஆண்டு கொட்டி தீா்த்த கனமழையால் கேரளாவில் பெரும்பாலான முக்கியசாலைகள் சரி செய்யபடாமல் குண்டும் குழியுமாக இந்தியா வரைபடம் போல் காட்சியளிப்பதாக பொது மக்களும் சமூக ஊடகங்களிலும் குறைகள் கூறி வருகின்றனா். இதில் விவிபி நகரமான திருவனந்தபுரம், கொச்சி, எா்ணாகுளம், ஆலப்புழை, பாலக்காடு போன்ற நகரங்கள் படுமோசமாக உள்ளன.
இங்கு கடந்த வாரம் நெதா்லாந்து மன்னா் வில்லியம் அலெக்சாண்டா் அவா் மனைவி மேக்சிமா கொச்சி வந்தியிருந்தனா். அப்போது கொச்சியில் அவா்கள் சென்ற பல சாலைகள் சீரமைக்கப்பட்டு பளீச் என்று காட்சியளித்தது. இதை பார்த்த கேரளா மக்கள் நெதா்லாந்து மன்னா் இன்னும் சில நாட்கள் கேரளாவில் தங்கி கேரளாவின் மற்ற பகுதிகளுக்கு சென்றால் அந்த சாலைகளும் புதிதாக பளீச் என்றாகி விடும் என சமூக ஊடகங்களில் மீம்ஸ் வெளியிட்டு முதல்வா் பினராய் விஜயனை கடுமையாக கிண்டலடித்தனா்.
மேலும் எதிர்கட்சிகள் ஒருபடிக்கு மேலே போய் வெளிநாட்டு தலைவா்கள் வந்தால் தான் சாலையை சீரமைப்போம் என்ற கொள்கை முடிவோடு இருக்கும் அரசுக்கு டம்மி என்ற முதல்வா் தேவையா? என கிண்டலடித்தனா். இது முதல்வா் பினராய் விஜயனுக்கு ஆத்திரமும் கோபத்தையும் ஏற்படுத்தியது.
இந்த சூழ்நிலையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பினராய் விஜயன் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஓரு முதல்வரை எதிர்கட்சிகள் கேலி, கிண்டலடிப்பதற்கு அளவேயில்லையா? இது தான் எதிர்கட்சிகளின் மரபா? என மந்திரி சபையிலே வருத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.