தமிழகத்தில் இன்று 4,328 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 43,548 பேருக்கு இன்று பரிசோதனை செய்யப்பட்டதில், இந்த எண்ணிக்கை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐந்து நாட்களுக்கு பிறகு நேற்று நான்காயிரம் என்ற எண்ணிக்கையிலிருந்த கரோனா பாதிப்பு, தற்பொழுது இன்றும் தொடர்ந்து நான்காயிரம் என்ற எண்ணிக்கையில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,140 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் பத்தாவது நாளாக இரண்டாயிரத்திற்கும் குறைவாக கரோனா பதிவாகி உள்ளது. ஆனால் பிற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சென்னையில் மட்டும் இதுவரை 78,573 பேருக்கு கரோனா இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் இதுவரை 1,42,798 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மருத்துவமனைகளில் 48,196 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 3,035 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல் இதுவரை தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 92,567 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையைவிட குணமடைவோர் எண்ணிக்கை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது அதேபோல் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, இன்று தமிழகத்தில் 66 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 50 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 16 பேரும் இறந்துள்ளனர். வேறு நோய் பாதிப்பு இல்லாத 7 பேர் இன்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை என்பது 2,032 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் மட்டும் அதிகபட்சமாக இதுவரை 1,277 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். 44வது நாளாக தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை என்பது இரட்டை இலக்கத்தில் தொடர்ந்து வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டில் 165 பேரும், திருவள்ளூரில் 129 பேரும், காஞ்சிபுரத்தில் 52 பேரும், மதுரையில் 120 பேரும், இராமநாதபுரத்தில் 38 பேரும், திருவண்ணாமலையில் 23 பேரும் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இதுவரை 755 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.
பிற மாவட்டங்களில் இன்று மூவாயிரத்தை கடந்து கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,188 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் அதிகபட்சமாக 464 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 352, திருவள்ளூரில் 337, செங்கல்பட்டில் 219, விழுப்புரத்தில் 143, தேனியில் 134, வேலூரில் 119, ராணிப்பேட்டையில் 126, தூத்துக்குடி 122, கன்னியாகுமரியில் 185, நெல்லையில் 118, சேலத்தில் 101, திருச்சியில் 92, திருவண்ணாமலை 83, திருவாரூர் 59 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.