Published on 06/12/2019 | Edited on 07/12/2019
தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூட்டணிக் கட்சிகளுடன் அதிமுக தலைமை ஆலோசனை செய்து வருகிறது.
இந்த ஆலோசனையில் பாஜக கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன், ராதாகிருஷ்ணன், கே.டி.ராகவன் ஆகியோர் அதிமுகவின் தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வருகின்றனர். அதேபோல் தேமுதிக கட்சி சார்பில் அழகாபுரம் மோகன்ராஜ், பார்த்த சாரதி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஞானதேசிகன், கோவை தங்கம் உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

ஒருபுறம் கூட்டணி பேச்சுவார்த்தையும், மறுபுறம் மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.