Skip to main content

8 இடங்களில் அதீத கனமழை பெய்துள்ளது!!!

Published on 04/12/2020 | Edited on 04/12/2020

 

TAMILNADU HEAVY RAINS REGIONAL METEOROLOGICAL CENTRE

 

 

‘வங்கக்கடலில், மன்னார் வளைகுடா பகுதி மற்றும் அதனை ஒட்டிய இராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் 04/12/2020 02.30 மணியளவில் தொடர்ந்து  அதே இடத்தில் நிலையாக இருக்கிறது.  

 

இது மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இராமநாதபுரம் மற்றும் அதையொட்டியுள்ள தூத்துக்குடி கடற்கரையை அடுத்த 6 மணி நேரத்தில் கடக்கக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் இது மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். 

 

TAMILNADU HEAVY RAINS REGIONAL METEOROLOGICAL CENTRE

 

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை தொடரும். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் கனமழை தொடரும். நாமக்கல், சேலம், அரியலூர், ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

 

தமிழகத்தில் 8 இடங்களில் 20 செ.மீ.க்கு மேல் அதீத கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 36 செ.மீ., சிதம்பரத்தில் 34 செ.மீ., மழை பெய்துள்ளது. அதேபோல் பரங்கிப்பேட்டையில் 26 செ.மீ., மணல்மேடு, குறிஞ்சிப்பாடியில் தலா 25 செ.மீ., திருத்துறைப்பூண்டியில் 22 செ.மீ., சீர்காழி, குடவாசலில் தலா 21 செ.மீ., ராமேஸ்வரத்தில் 20 செ.மீ., பேராவூரணி, மஞ்சளாறு, புவனகிரி, மயிலாடுதுறையில் 19 செ.மீ., பட்டுக்கோட்டையில் 17 செ.மீ., மதுக்கூரில் 16 செ.மீ. மழை பதிவானது' இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்