முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் நகைகள் காணாமல் போனது தொடர்பாக அவரது குடும்பத்தினர் சார்பாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார், ப.சிதம்பரம் வீட்டில் வேலை செய்த வெண்ணிலா, விஜயா ஆகிய இரண்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் விஜயா மகன் மணிகண்டன் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். மணிகண்டன் தாய்மாமன் சுபாஷ் சந்திரபோஸ், அவருடைய மனைவி சாரதா இருவரிடமும்தான் நகைகளை கொடுத்து வைத்தார்கள். அந்த நகைகளெல்லாம் இப்போது காணவில்லை என்று கூறியுள்ளார். இந்த புகார் தொடர்பாக சாரதாவை போலீசார் விசாரித்துள்ளனர். இந்த நிலையில் சாரதா தற்கொலை செய்துகொண்டார். சாரதா தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே கார்த்தி சிதம்பரம், தங்கள் வீட்டில் எந்த நகையும் காணாமல் போகவில்லை என்று போலீசில் தெரிவித்துள்ளார்.