Skip to main content

காவலர்களுக்கே பைன் போட்ட போலீசார்; அமலுக்கு வந்த புதிய கட்டுப்பாடு!

Published on 02/05/2024 | Edited on 02/05/2024
A new regulation has come into effect on sticker on number plate and Cops pining for the guards

சென்னை பெருநகர வாகனங்களில் நம்பர் பிளேட் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது எனப் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ள நிலையில் இன்று (02-05-24) முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பாக செல்லக்கூடிய போலீசார் வாகனங்களில் சம்மந்தப்பட்ட துறையைச் சேர்ந்த காவலர் என்ற ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது எனப் போக்குவரத்து போலீசார் தீவிர சோதனையில் விழிப்புணர்வு எச்சரிக்கையில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக இன்று போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டி செல்லும் வாகனங்களைப் போக்குவரத்து போலீசார் கண்காணித்து அவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தனர். 

அதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த வேப்பேரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாண்டியவேலு பேசியதாவது, “கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற அறிக்கை அறிவிப்பு வெளிவந்தது. இதில் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், காவல்துறை என எந்த ஒரு ஸ்டிக்கரையும் வாகனங்களில் உள்ள நம்பர் பிளேட்டில்  ஒட்டக்கூடாது என்ற அறிவிப்பு வந்தது. குறிப்பாக வாகனங்களில் இருக்கக்கூடிய நம்பர் பிளேட்டில் எந்த ஒரு ஸ்டிக்கரையும் ஒட்டக்கூடாது எனவும் வாகனத்தில் இருக்கக்கூடிய நம்பர் பிளேட் தெளிவாக தெரிய வேண்டும் எனவும் வந்தது. அனைத்து துறை ஸ்டிக்கர்களும் குறித்து அடுத்த அறிவிப்பு வந்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இருப்பினும்  பல பேர் நம்பர் பிளேட்டில் உள்ள வாகன ஸ்டிக்கர் எடுத்து விட்டனர்.

A new regulation has come into effect on sticker on number plate and Cops pining for the guards

தற்பொழுது அரை மணி நேரமாக நிற்கின்றோம். இரண்டு வாகனங்கள் மட்டும்தான் காவலர் ஸ்டிக்கர் ஒட்டி வந்தது. ஒரு சில நபர்களுக்கு வாகன நம்பர் பிளேட் ஸ்டிக்கர் விவகாரம் தெரியாமல் உள்ளனர். அவர்களுக்கு எடுத்துரைத்து, அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி ஸ்டிக்கரை அவர்களே அடுத்தபடியாக எடுக்குமாறு கூறியுள்ளோம். முதல் முறையாக 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. வீட்டில் சென்று ஸ்டிக்கரை எடுக்காமல் இருந்தால் மீண்டும் அடுத்த இடத்தில் போக்குவரத்து போலீசார் மூலம் பிடிக்கப்படும் பொழுது 1500 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து  தெரிவித்து வருகிறோம். 

வாகன நம்பர் பிளேட் ஸ்டிக்கர் விவகாரத்தில் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக காவல் துறை வாகனத்தில் இருந்து நாங்கள் இந்த நடைமுறையை ஆரம்பித்திருக்கிறோம். மேலும், போக்குவரத்து போலீசார் நம்பர் பிளேட் உள்ள ஸ்டிக்கர்களை அகற்ற போலீசாருக்கு அதிகாரம் இல்லை. மேலும், இந்தச் சோதனைக்கு காவல்துறையினர் ஒத்துழைப்பு தருகின்றனர். இந்த நடைமுறையில் அரசு என்ன சொல்கிறதோ அதை அடுத்த கட்டமாக செய்ய உள்ளோம். அதைத் தொடர்ந்து நாங்கள் நடவடிக்கை எடுப்போம். குற்றச்செயலில் ஈடுபடும் நபர்கள் கூட அந்த ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு வாகனத்தில் செல்கின்றனர். காவல்துறையிடம் இருந்து தற்காத்துக் கொள்ள அவர்கள் இப்படி செய்கின்றனர். ஊடகத்தில் பணிபுரியும் பல நபர்கள் இதை வரவேற்கிறார்கள்” எனக் கூறினார்.

சார்ந்த செய்திகள்