Skip to main content

"கரோனா வேகமாகக் குறைந்துவருகிறது" - அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி!

Published on 02/06/2021 | Edited on 02/06/2021

 

coronavirus tamilnadu health minister pressmeet



சென்னை அயப்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், "தமிழகத்தில் வேகமாகப் பரவிய கரோனா தற்போது அதே வேகத்தில் குறைந்துவருகிறது. கரோனா குறைந்துவருவதால் பாதிப்பில் இருந்து மீண்டுவிடுவோம் என்ற நம்பிக்கை மக்களிடம் பிறந்துள்ளது. 8,072 ஆக்சிஜன் படுக்கைகள் உட்பட மொத்தம் 25,134 படுக்கைகள் அரசு மருத்துவமனைகளில் நேற்று (01.06.2021) காலியாக இருந்தது.

 

ஜூன் மாதத்திற்கான 42 லட்சம் கரோனா தடுப்பூசிகளில், சுமார் 5 லட்சம் கரோனா தடுப்பூசிகள் நேற்று வந்திருக்கின்றன. தற்போது தமிழகத்தில் ஆறரை லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. கரோனா பரவல் சற்று அதிகம் உள்ள மேற்கு மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கரோனா நோயாளிகளே இல்லை என்ற நிலை விரைவில் உருவாகும்" எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அழகு சாதனப் பொருட்கள் அறிமுகப்படுத்தும் விழா (படங்கள்)

Published on 05/04/2023 | Edited on 05/04/2023

 

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்ட அரங்கில் இன்று (05.04.2023) காலை 9.00 மணியளவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துக் கழகம் தயாரித்துள்ள 6 அழகு சாதனப் பொருட்கள் அறிமுகப்படுத்தும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், அழகு சாதனப் பொருட்களை பார்வையிட்டு மக்கள் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்து வைத்தார். 

 

 

Next Story

சுகாதாரத்துறை அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடு; பரபரப்பில் ஒடிசா

Published on 29/01/2023 | Edited on 29/01/2023

 

Firing on health minister; commotion in Odisha

 

போலீஸ் ஏட்டு குறி பார்த்து சுட்டதில் சுகாதாரத்துறை அமைச்சர் படுகாயம் அடைந்த சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

ஒடிசாவின் பிரச்ராஜ் நகர் என்ற பகுதிக்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்று கொண்டிருந்த அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபாதாஸ் மீது மர்ம நபர் ஒருவர் வழிமறித்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இரண்டு ரவுண்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மருத்துவத்துறை அமைச்சர் நபாதாஸின் நெஞ்சு பகுதியில் தோட்டாக்கள் பாய்ந்தது.

 

n

 

இதில் படுகாயமடைந்த அமைச்சர் நபாதாஸ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் போலீஸ் ஏட்டு கோபால் தாஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்பொழுது அமைச்சர் கவலைகிடமாக உள்ள நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒடிசாவில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.