Skip to main content

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் 5 மாநில தேர்தல் முடிவு

Published on 11/12/2018 | Edited on 11/12/2018
rahul-modi



தெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. 
 

தற்போதையை நிலவரப்படி தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி முன்னிலையில் உள்ளது. மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ், பாஜக இரண்டுமே ஒன்றிரண்டு தொகுதிகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளன. ராஜஸ்தானில் காங்கிரஸ் முன்னணியில் உள்ளது. சத்தீஸ்கரில் காங்கிரஸ் முன்னணியில் உள்ளது. மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி முன்னணியில் உள்ளது. இரண்டாவதாக காங்கிரஸ் உள்ளது. 
 

இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல் முடிவு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
 

 

 

சார்ந்த செய்திகள்