இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்களிடம் பல்வேறு விழிப்புணர்வைகளை ஏற்படுத்தி வருகிறது. இதில் ஒரு பகுதியாக தமிழக தேர்தல் ஆணையம் தனது "ட்விட்டர்" பக்கத்தில் தமிழகத்தில் எத்தனை மக்களவை தொகுதிகள் உள்ளது ?
1) 39
2) 40
என்ற கேள்வியை எழுப்பியது. இதற்கு டிவிட்டர் வாயிலாக அனைவரும் பதிலளித்து வருகின்றனர். இதற்கு பதில் 39 மக்களவை தொகுதிகள் தமிழகத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புதுவை மாநிலத்தில் ஒரு மக்களவை தொகுதியும் உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையுடன் சேர்த்து மக்களவை தொகுதிகள் 40 ஆகும்.
இதன் மூலம் தமிழகத்தில் உள்ள மக்களுக்கு எத்தனை மக்களவை தொகுதிகள் நம் மாநிலத்தில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் எளிதில் அறியும் வகையில் தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தமிழக தேர்தல் ஆணையம் மக்கள் நேர்மையான முறையில் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் எனவும் , 100% வாக்குகளை எதிர்நோக்கும் வகையில் தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதே போல் ஓட்டு பணம் வாங்க மாட்டோம் என்ற விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் இளம் வாக்காளர்கள் அனைவரும் வாக்குகளை பதிவு செய்யும் வகையில் தமிழக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைக்களை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
100% வாக்குகளை உறுதி செய்வோம்!
ஜனநாயக கடமையை ஆற்றுவோம்!
"My Vote Not For Sale"
"My Vote My Rights"
பி.சந்தோஷ் ,சேலம்.