இந்தியாவின் முன்னால் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு வேலூர் மத்திய பெண்கள் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை குற்றவாளியான நளினி, கடந்த 29 வருடங்காக சிறையில் இருந்து வருகிறார். இவரது கணவர் முருகன் உட்பட 7 பேர் சிறையில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ளனர்.

இவர்களை விடுதலை செய்வது தொடர்பக தமிழக அமைச்சரவையில் தீர்மானம் இயற்றி கவர்னருக்கு அனுப்பப்பட்டது. அந்த மனு கவர்னர் அலுவலகத்திலேயே உள்ளது. இதன் மீது முடிவெடுக்க வேண்டும்மென நளினி உட்பட 7 பேர் சார்பாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், தன்னை கருணைக் கொலை செய்ய வேண்டும்மென இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மனு அனுப்பிவிட்டு, கடந்த 28ந்தேதி முதல் நளினி உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனை சிறைத்துறையும் உறுதி செய்துள்ளது. டிசம்பர் 7ந் தேதியோடு 10 நாளாக அவரின் உண்ணாவிரதம் தொடர்கிறது.
டிசம்பர் 5ந்தேதி அவரது உடலில் சத்து குறைந்ததால் அவருக்கு இரண்டு பாட்டில் குளுகோஸ் ஏற்றப்பட்டது. மருத்துவர்கள் உண்ணாவிரதம் வேண்டாம் என வலியுறுத்தியும் அவர் பிடிவாதமாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். கடந்த 5 நாட்களாக நளினி வைத்த அதே கோரிக்கையை முன்வைத்து அவரது கணவர் முருகனும் வேலூர் ஆண்கள் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.