Published on 31/07/2019 | Edited on 31/07/2019
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கட்டணத்தை குறைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு. மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு கேபிள் டிவி கட்டணம் ரூ.130 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இத்துடன் பொதுமக்கள் ஜி.எஸ்.டி வரி மட்டும் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
![tamilnadu arasu cable monthly price decrease announced tn cm edappadi palanisamy](http://image.nakkheeran.in/cdn/farfuture/UiKCP-ElRqekV0Aovg4oQV-J6h5UmJ_3WOpO50IUDrQ/1564582582/sites/default/files/inline-images/TACTV131018.jpg)
இந்த கட்டண குறைப்பு ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும், மாத சந்தா கட்டணமாக ரூபாய் 130 + ஜிஎஸ்டி என்ற முறையில் மக்கள் செலுத்தலாம் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் சுமார் 32 லட்சம் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன சந்தாதாரர்கள் பயனடைவார்கள். மேலும் அரசு கேபிள் டிவி பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை வரும் காலங்களில் அதிகரிக்கும் என்று முதல்வர் கூறினார்.