Skip to main content

என்.எல்.சி.க்கு 5 கோடி ரூபாய் அபராதம்!!   

Published on 09/07/2020 | Edited on 09/07/2020
 Rs 5 crore fined to NLC

 

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்தில், கடந்த 01-ஆம் தேதி 5-ஆவது அலகிலுள்ள கொதிகலன் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே 6 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 17 பேர்  தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னை அப்பலல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

அடுத்தடுத்து என்.எல்.சி. கொதிகலன் வெடித்த விபத்தில் சிகிச்சை பலனிற்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. இந்நிலையில் கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்ட என்.எல்.சி.க்கு 5 கோடி ரூபாய் அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்