Published on 10/08/2019 | Edited on 10/08/2019
தமிழகத்தில் சென்னை, கோவை, தஞ்சை, காரைக்கால் உள்ளிட்ட 55 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூபாய் 4.5 கோடி பணத்தை காரில் இருந்து பறிமுதல் செய்ததாக குறிப்பிட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூபாய் 700 கோடி வருமானம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
![TAMILNADU 55 PLACES IT RAIDS GOING NOW INCOME TAX STATEMENT](http://image.nakkheeran.in/cdn/farfuture/z93XnFkJlbUYWKqDrQ-_4lf10rNXggcK9uxs7Ab8JdA/1565452507/sites/default/files/inline-images/ito_92191790-4d2a-11e8-bd65-8f9614bffbbb.jpg)
மதுபான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். அந்த நிறுவனத்தில் மூலப்பொருட்கள் வாங்கியதற்கான கணக்கில் குளறுபடி செய்து ரூபாய் 400 கோடி வரி ஏய்ப்பு. மேலும் மற்றொரு மதுபான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.