Skip to main content

மருத்துவ மாணவர்களுக்கு புத்தகத் திருவிழாவில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. அமைச்சர் சொன்ன ரகசியம்

Published on 27/12/2022 | Edited on 27/12/2022

 

Tamil translations medical textbooks will be released Chennai Book Festival

 

சிதம்பரத்திலுள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கட்கிழமையன்று தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 10 கோடியில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு சிகிச்சை மையக் கட்டடம், ரூ. 1 கோடியில் ஒருங்கிணைந்த ஆய்வகக் கட்டடம் கட்டுவதற்கான வரைபடத்தை ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து ரூ. 2 கோடியே 70 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவினை தொடங்கி வைத்தனர்.

 

பின்னர், மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மாணவர் மன்ற நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் திருப்பதி தலைமைத் தாங்கினார். இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “இந்தப் பல்கலைக்கழகம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. பல அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் அறிஞர்களையும் உருவாக்கிய பல்கலைக்கழகம் இதில் பயின்றவர்தான் முன்னாள் அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான மறைந்த க.அன்பழகன். தற்போதுள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், பொன்முடியின் மகன் கௌதமசிகாமணி எம்.பி. உள்ளிட்ட பல்வேறு தலைவர்களையும் அறிஞர்களையும், மருத்துவர்களையும் உருவாக்கி உள்ளது.

 

2011 இல் கலைஞர் முதல்வராக இருந்தபோது மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என அனுமதி பெற்று அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது தமிழகத்தில் 36 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. புதியதாகத் தொடங்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கு மருத்துவக் கல்லூரிகள் புதிதாகத் தொடங்க வேண்டும்.  இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட மருத்துவக் கல்லூரியைத் தொடங்க முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 

இந்தக் கல்லூரியில் மருத்துவ மாணவர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இதனை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று ரூ. 113 கோடி மாணவர்களுக்கு கட்டணச்சலுகை அளிக்கப்பட்டது. தற்போது பயிலும் மாணவர்களுக்கு மற்ற அரசு மருத்துவக் கல்லூரி போல் கல்விக் கட்டணம் ரூ.13,000 மட்டுமே. இந்தக் கல்லூரியில் நரம்பியல் மற்றும் இருதய சார்ந்த நோய்களுக்கு மருத்துவர்களை நியமித்து பல்நோக்கு மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக உதவி மருத்துவ கல்வி இயக்குநர் சாந்தாராம் தலைமையில் நான்கு பேர் அடங்கிய குழு அமைத்து இந்தக் கல்லூரியில் மருத்துவர்கள், ஊழியர்கள், மாணவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தும் விதமாக இந்தக் குழு ஒரு மாதம் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையைச் சமர்ப்பிக்கும்.

 

மருத்துவக் கல்வியை தமிழில் பயிலும் விதமாக 13 மருத்துவப் பாடப் புத்தகங்கள் தமிழ் மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் வரும் 16 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் வெளியிடுகிறார். அதேபோல் பொறியியல் துறையில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 10 புத்தகங்களையும் வெளியிடுகிறார். தமிழகத்தில் 92 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதனால் கடந்த 7 மாதங்களாக கொரோனா உயிரிழப்பு இல்லை. உருமாறிய கொரானா வந்தால் அதனைச் சமாளிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனப் பேசினார்.

 

இதனைத் தொடர்ந்து பேசிய வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், “கடலூர் மாவட்டத்திற்கு மின்தடையில்லாமல் மின்சாரம் வழங்க அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டில் இல்லாத 20 ஏக்கர் நிலத்தைப் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த மருத்துவக் கல்லூரியில் மயிலாடுதுறை, நாகை, அரியலூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மக்கள் சிகிச்சைக்காக அண்டை மாநிலமான புதுவைக்குச் செல்லாத வகையில் அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தப்படும்” எனப் பேசினார்.

 

அதைத் தொடர்ந்து சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், காட்டுமன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் ஆகியோர் மருத்துவமனை வளர்ச்சி குறித்துப் பேசினார்கள். நிகழ்ச்சியில் மருத்துவக்கல்வி இயக்குநர் சாந்திமலர், அண்ணாமலைநகர் பேரூராட்சி மன்றத் தலைவர் பழனி, முன்னாள் எம்எல்ஏ சரவணன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கிள்ளைரவீந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். சென்னையில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவில் மருத்துவ மாணவர்களுக்கு, மருத்துவப் பாடப் புத்தகங்களை தமிழ் மொழியில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்படவுள்ளது, மாணவர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.