Skip to main content

புதுச்சேரியில்  தங்க நகைகள் கொள்ளை அடித்த  தமிழக வாலிபர் கைது!  

Published on 13/07/2018 | Edited on 13/07/2018
puthuchery

 

புதுச்சேரியில் கடந்த மாதம் ஜீவானந்தம் வீதி மற்றும் ஏனம் வெங்கடாசலப்பிள்ளை வீதியில் ஒரே நேரத்தில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அவ் வழக்கில் சாந்தன் என்பவர் ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் தங்க நகைகள் கொள்ளை அடித்ததாக புகார் அளித்திருந்தார்.  

 

புகாரின் பேரிலான தேடுதலில்   உருளையன்பேட்டை போலீசார் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன்  சுந்தர் (எ) டேனியல் வயது (32) என்பவனை கைது செய்து  விசாரித்தனர். விசாரணையில்  சுந்தர் மீது தமிழக காவல்துறையில் 40 திருட்டு வழக்குகள் உள்ளது தெரிந்தது.  அவனிடமிருந்து 4 லட்சம் மதிப்பிலான நகைகளையும் காவல் துறையினர் மீட்டனர்.

சார்ந்த செய்திகள்