இந்தியா முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்துள்ள ‘கோவிஷீல்ட்’ தடுப்பு மருந்துக்கும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்துக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், ஜனவரி 16 முதல் நாடு முழுவதும் தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் முதற்கட்டமாக 166 மையங்களில் சுகாதாரப் பணியாளர்களுக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. கரோனா தடுப்பூசிகள் இரண்டு முறை செலுத்தப்பட வேண்டும் என்பதால் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டவர்களுக்கு, இரண்டாவது டோஸ் செலுத்தும் பணிகள் கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. இதற்கிடையே தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று (15.02.2021) இரண்டாவது டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.