![Tamil Nadu Government Employees Union picket to continue for fourth day ... (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/8TyJ4bwTjFLauCXUFoM-TfidjNiHY-5pdwjDXQPwFV8/1612521060/sites/default/files/2021-02/tnge-3.jpg)
![Tamil Nadu Government Employees Union picket to continue for fourth day ... (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/5K384hJ33i-JeLambs2IjQSe1kgV4YBlyH6GM0GSr3Y/1612521060/sites/default/files/2021-02/tnge-4.jpg)
![Tamil Nadu Government Employees Union picket to continue for fourth day ... (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/WJxy7zydapo1Ne1wZ6wWTfASYuJykS5GtZwwGUwgAso/1612521061/sites/default/files/2021-02/tnge-5.jpg)
![Tamil Nadu Government Employees Union picket to continue for fourth day ... (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/4fJwGg7WinuLndhSu5hS11CL2ItUwim-9W6Euqq--Rc/1612521061/sites/default/files/2021-02/tnge-6.jpg)
![Tamil Nadu Government Employees Union picket to continue for fourth day ... (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/syNKaVv_WlQ6vsm_ZUHSDVLTNSwCtgFoukfR0paes7I/1612521061/sites/default/files/2021-02/tnge-7.jpg)
![Tamil Nadu Government Employees Union picket to continue for fourth day ... (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/Z4LBZ4JqkaYpcg1KnqUeIeygC2LZchmMSpy-AKXfTkU/1612521061/sites/default/files/2021-02/tnge-8.jpg)
![Tamil Nadu Government Employees Union picket to continue for fourth day ... (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/v1WxGJco2H5BgSlb1NBbtpG9hxht6AXl1pUbBKO73pw/1612521061/sites/default/files/2021-02/tnge-9.jpg)
Published on 05/02/2021 | Edited on 05/02/2021
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், "புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், நூலகர்கள், எம்.ஆர்.பி செவிலியர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் 3.50 லட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.
அவுட்சோர்சிங் முறை மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும், ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தைக் கைவிட வேண்டும், 4.50 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிகைகளை வலியுறுத்தி, பிப்.2 முதல் மாவட்டத் தலைநகரங்களில் தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நான்காவது நாளாக எழிலகம் அருகே காமராஜர் சாலையில் நடைபெற்றது.