’’உச்சநீதிமன்ற நகல் கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஏழு பேரை விடுவிக்க வேண்டும் என்று அதிமுக ஏற்கனவே எடுத்த முடிவுதான். 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு இப்போதும் உறுதியாக உள்ளது’’என்று தெரிவித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.
சென்னையை அடுத்து ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1999ம் ஆண்டில் குண்டுவெடிப்பு மூலம் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், சாந்தன், ரவிச்சந்திரன், முருகன், நளினி ஆகிய 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசே முடிவு செய்யலாம் என்ற உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யலாம் என்றும், பரிந்துரையின் மீது முடிவெடுக்கும் முழு அதிகாரம் ஆளுநருக்கு உண்டு என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.