கேரளாவில் ஏற்பட்ட வெள்ளபாதிப்புகளுக்கு பலர் நிவாரணங்கள், நிதியுதவிகள் கொடுத்துவருகின்றனர். இந்தநிலையில் விழுப்புரம் கே.கே ரோடு பகுதியை சேர்ந்த சிவசண்முகம் லலிதா தம்பதியினரின் 8 வயது மகள் அனுப்ரியா இவர் குருவி சேர்ப்பதைப்போல உண்டியலில் 8 ஆயிரம் ரூபாயை ஆசையாக சைக்கிள் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு சேர்த்துவைத்துள்ளார். ஆனால் தற்போது கேரளாவில் ஏற்பட்டுவரும் வெள்ளப்பாதிப்புகளை தொலைக்காட்சியில் பார்த்த அந்த சிறுமிக்கு தான் சேர்த்துவைத்த அந்த தொகையை கேரளாவெள்ள பாதிப்பிற்கு கொடுத்து உதவலாம் என்ற எண்ணம் தோன்ற தன் தந்தையிடம் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து அவரது தந்தையும் செல்லமகளின் ஆசையை நிறைவேற்ற சில்லறையாக உண்டியலில் சேமிக்கப்பட்ட அந்த தொகையை கேரளாவெள்ளத்திற்க்கு நிதியுதவியாக கொடுத்துள்ளார். ஆசையாக சைக்கிள் வாங்க உண்டியலில் சேர்த்துவைத்த பணத்தை கேரளவெள்ள நிவாரணத்திற்கு கொடுத்த அந்த சிறுமியின் ஆசையை கேள்விபட்ட ஹீரோ சைக்கிள் நிறுவனம் சிறுமி அனுப்ரியாவின் ஆசையை நிறைவேற்றும் விதமாக சைக்கிள் ஒன்றை பரிசாக அளித்துள்ளது.