சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் பணம் கேட்டு மிரட்டி நெருக்கடி தருவதை கண்டித்து ஆண்டிபட்டியில் நெசவாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளனர்
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி அருகே இருக்கும் சுப்புலாபுரம். எஸ் எஸ் புரம். முத்து கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உள்ளனர். இவர்கள் 1500க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் பயன்படுத்தி நெசவு செய்து வருகின்றனர். தமிழக அரசின் இலவச வேட்டி சேலைகள் இங்கு நெய்யப்படுகின்றன மேலும் சாமி வேஷ்டிகள் துண்டுகள் சேலைகள் உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் நெசவு செய்யப்பட்டு திருப்பூர்.கோவை.ஈரோடு உள்பட சில வெளியூர் களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இதுமட்டுமின்றி இங்கு தயாரிக்கப்படும் சுங்குடி சேலைகள் வெளிநாடுகளிலும் நல்ல மவுசு உள்ளது அப்படி இருக்கும்போது சமீபகாலமாக சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் வெளி நபர்கள் பணம் கேட்டு நெசவாளர்களை மிரட்டி வருவதாக புகார் தெரிவித்துள்ளனர். மேலும் உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியும் கூட தொடர்ந்து நெருக்கடி தந்து கொண்டிருக்கின்றன. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் விடம் நெசவாளர்கள் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை இதனால் மனம் நொந்து போன ஒட்டுமொத்த நெசவாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது சம்பந்தமாக கைத்தறி சங்க நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, கடந்த சில வாரங்களாக சமூக ஆர்வலர் என்ற பெயரில் சாய தொழிலுக்கு நெருக்கடி தந்து வருகின்றனர். எங்கள் மீது தவறான குற்றச்சாட்டை புகார் கொடுத்துள்ளனர் காட்டன் துணியை கைத்தறியிலும் மற்ற ரகங்களை விசைத்தறியி லும் நெய்ய வேண்டும் என்பது விதி நாங்கள் பாலிஸ்டர் கலந்த காட்டன் ரகங்களை தான் விசைத்தறியில் நெய்து வருகிறோம். ஆனால் தொடர்ந்து புகார் அனுப்புவதால் அதிகாரிகளும் அந்த மனு மீது நடவடிக்கை எடுப்பதாக நெருக்கடி தருகின்றனர். ஆரம்பத்தில் 21 ரகங்களை கைத்தறியில் மட்டுமே நெய்ய வேண்டும் என்ற விதி இருந்தது தற்போது விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது தெரியாமல் சிலர் தொடர்ந்து புகார் அனுப்பி வருகின்றனர். எனவே இதுபோன்ற சம்பவத்தை கண்டித்து தான் அனைவரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம் என்றனர்.
இப்படி திடீரென நெசவாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது. அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இனிமேலாவது மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் அதிரடி நடவடிக்கை எடுத்து நெசவாளர்களின் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.