சென்னை - வள்ளுவர் கோட்டம் அருகே இன்று (22.2.2018) காலை 11 மணியளவில் சமூகநீதிப் பாதுகாப்புக்கான பேரவை சார்பில் நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்ட மாணவர் அமைப்பினர் பங்கேற்று எழுச்சி முழக்கமிட்டனர். திராவிடர் மாணவர் கழக மாநில கூட்டுச் செயலாளர் சே.மெ.மதிவதனி வரவேற்றார். திராவிடர் மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தொடக்க உரையாற்றினார். அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர் சீ.தினேஷ் ஆர்ப்பாட்ட நோக்கவுரையாற்றினார்.
திராவிட முன்னேற்றக் கழக மாணவரணி மாநிலச் செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமாகிய சி.வி.எம்.பி.எழி லரசன் நீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு தலைமையேற்று நீட்டை எதிர்ப்பது ஏன்? எனும் தலைப்பில் விளக்கவுரையாற்றினார்.
வழக்குரைஞர் ஜெரால்டு, நா.பார்த்திபன், ப.சோமசுந்தர மூர்த்தி, வானவில் விஜய், தமீம் அன்சாரி, அ.சுரேஷ், முபின், ராமசாமி, வி.சேஷன், இரா.சத்தியகுமரன், முகவை இரா.சங்கர், பா.ஜெய்கணேஷ், எம்.அருணாச்சலம், ச.இராஜராஜ சோழன், ஈகை ஜி.சிவா, எச்.முகம்மது அசாருதீன், ஜி.ரஹீம் பாஷா, அப்துல் ரஜாக், முகம்மது பெரோஸ், குர்ஷித், எஸ்.விஜயகுமார், பிஎம்.சுரேஷ் பாபு, கார்த்திகேயன், எழிலன், ஆனந்தராஜ், அம்பேத்கர், அத்னான், பிரபாகரன், அலாவு தீன், அன்வர் இஸ்மாயில், கபீர் அஹ்மத், ஆர்.ராஜன் உள்பட பல்வேறு மாணவர் அமைப்பினர் முன்னிலை வகித்தனர். வழக்குரைஞர் கவி.கணேசன், யாழ் திலீபன், கஸாலி, விஜயக்குமார் ஆகியோர் நீட் எதிர்ப்பு முழக்கமிட்டனர்.
மதிமுக மாணவர் அணி மாநிலச் செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம், மாநில உரிமை பறிப்பு எனும் தலைப்பிலும், முஸ்லிம் மாணவர் பேரவையின் மாநிலச் செயலாளர் அன்சாரி பாசிச நோக்கம் எனும் தலைப்பிலும், முற்போக்கு மாணவர் கழகத்தின் மாநிலத் துணைச் செயலாளர் வழக்குரைஞர் செஞ்சுடர் நீட் தேர்வின் சமூகநீதி மறுப்பு எனும் தலைப்பிலும், சமூகநீதி மாணவர் இயக்கத்தின் மாநில துணைச் செயலாளர் பெரோஸ், கல்வி உரிமை மறுப்பு எனும் தலைப்பிலும், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாநிலத் தலைவர் முஸ்தபா, கல்வி முதலைகள் கொள்ளை எனும் தலைப்பிலும், மாணவர் இந்தியா மாநிலச் செயலாளர் அசாருதீன் இந்துத்துவக் கல்வித் திணிப்பு எனும் தலைப் பிலும், திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாணவரணி ஒருங்கிணைப்பாளர் சிறீநாத் நுழைவுத் தேர்வே அவசிய மற்றது எனும் தலைப்பிலும், அகில இந்திய கிராமப்புற மாணவர் சங்கம் சார்பில் கா.அமுதரசன் உயர் ஜாதி, நகர்ப்புற பணக்காரர்களுக்கானது எனும் தலைப்பிலும், சமூக நீதி மாணவர் இயக்கத்தின் மாநில பொருளாளர் அன்சாரி உள்பட பலர் நீட் திணிப்பை எதிர்த்தும், கல்வி உரிமைகளை வலியுறுத்தியும், கல்விணை மாநிலப்பட்டியலுக்கு திரும்பக் கொண்டுவர வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்ட முடிவில் திமுக மாணவரணி மாநிலத் துணைச் செயலாளர் எஸ்.மோகன் நன்றி கூறினார்.
அனைத்து மாணவர் அமைப்புகளின் சார்பிலும் கொடிகள் ஆர்ப்பாட்டத்தின் எழுச்சியை பறைசாற்றின. திராவிடர் மாணவர் கழகம், திராவிட முன்னேற்றக் கழக மாணவரணி, அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், மதிமுக மாணவர் அணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி முற்போக்கு மாணவர் கழகம், முஸ்லிம் மாணவர் பேரவை, முற்போக்கு மாணவர் கழகம், சமூகநீதி மாணவர் இயக்கம், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா, மாணவர் இந்தியா, திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாணவரணி, அகில இந்திய கிராமப்புற மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவரணியினர் பெருந்திரளாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உணர்ச்சிமிகு முழக்கங்களை எழுப்பினார்கள்.