Skip to main content

மேட்டூர் அனல்மின் நிலைய ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரப்படுத்தக்கோரி தவெக போராட்டம்  

Published on 11/03/2025 | Edited on 11/03/2025
struggle demanding permanent employment of Mettur Thermal Power Plant contract workers

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என தவெக சார்பில் போராட்டம் நடைபெற்றது. 

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக 1200 க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். சுமார் 12 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் தங்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். '153:பொதுத்துறை நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய ஒப்பந்தப்பணியாளர்களின் பணி நிரந்தப்படுத்தப்படும்' என திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தது. 

இந்நிலையில் ஒப்பந்த பணியாளர்கள் அனைவரையும் நிரந்தரப்படுத்த வேண்டும் என கடந்த 15 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டமானது நடைபெற்று வருகிறது. மேட்டூர் மின் நிலைய ஊழியர்கள் குடும்பத்துடன் பங்கேற்க உள்ளனர். சுமார் 1500 க்கும் மேற்பட்ட தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் பதாகைகளுடன் அங்கு கூடியுள்ளனர்.

சார்ந்த செய்திகள்