Skip to main content

சிலை கடத்தல் வழக்கு - தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் இடையே நடந்த கடிதப் பரிமாற்றங்கள் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு

Published on 24/08/2018 | Edited on 25/08/2018
s

 

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றுவது தொடர்பாக தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் இடையே நடந்த கடிதப் பரிமாற்றங்கள் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி மகாதேவன் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

 

தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜயநாராயண், ஏற்கனவே இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.

 

தமிழக அரசின் பதில் மனுவுக்கு பதிலளிக்க, இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றியது தொடர்பான தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் இடையே நடந்த கடிதப் பரிமாற்றங்கள் தொடர்பான  ஆவணங்களை தனக்கு வழங்க வேண்டும் என்று மனுதாரர் யானை ராஜேந்திரன் கோரிக்கை வைத்தார்.

 

அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், அந்த ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கில் சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப மனுதாரரான ராஜேந்திரனுக்கும் நீதிபதிகள் அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

 

சார்ந்த செய்திகள்